2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

தந்தையிடமிருந்து வாடகை வசூலிக்கும் இளவரசர் வில்லியம்

Ilango Bharathy   / 2022 ஒக்டோபர் 06 , மு.ப. 09:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரித்தானியாவின் மகாராணி 2ஆம் எலிசபெத்தின் மறைவுக்குப்  பின்னர், அவரது சொத்துக்கள் பல முக்கிய ராஜகுடும்ப உறுப்பினர்கள் வசம் கைமாறியுள்ளன.

அந்த வகையில் மன்னர் சார்லஸுக்கு மிக நெருக்கமான ‘Highgrove‘ மாளிகை உட்பட சுமார் 345 மில்லியன் பவுண்டுகள் மதிப்பிலான கார்ன்வால் தோட்டம் தற்போது வேல்ஸ் இளவரசர் வில்லியம் வசம் உள்ளது.

 இத் தோட்டமானது மொத்தம் 128,000 ஏக்கர் நிலப்பரப்பைக் கொண்டுள்ளதாகவும், இத் தோட்டத்திலிருந்து கடந்த ஆண்டு மாத்திரம்  21 மில்லியன் பவுண்டுகள் வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சார்லஸ் மன்னரானதும், இந்த தோட்டமானது அவரது மகன் வில்லியம் வசமானதாகவும், எனினும் அதில் அமைந்துள்ள Highgrove மாளிகையை  நீண்ட கால குத்தகைக்கு மன்னர் சார்லஸ் எடுத்துள்ளார் எனவும், இதனால் ஆண்டுக்கு 7,00,000 பவுண்டுகள் தொகையை மன்னர் சார்லஸ் ,இளவரசர் வில்லியத்திற்கு அளிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த மாளிகை கடந்த 1980ஆம் ஆண்டில் இருந்து சார்லஸின் குடும்ப மாளிகையாக அமைந்துள்ளது.

 மேலும், தென் லண்டனிலுள்ள ஓவல் கிரிக்கெட் மைதானமும் தற்போது வேல்ஸ் இளவரசர் வில்லியம் வசம் உள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X