Freelancer / 2022 பெப்ரவரி 13 , பி.ப. 05:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
டெக்சாஸின் கோலிவில்லிலுள்ள காங்கிரேஷன் பெத் இஸ்ரேல் ஜெப ஆலயத்தை மாலிக் அக்ரம் தாக்குவதற்கு முன்னர், "லேடி அல் கொய்தா" என்றழைக்கப்படும் ஆஃபியா சித்திக்கை விடுவிப்பதற்கான சமூக ஊடக பிரச்சாரம் அதிகரித்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
குற்றவாளியான "லேடி அல் கொய்தா" ஆஃபியா சித்திக்கிக்கு அனுதாபம் தெரிவிக்கும் டுவிட்டர் செயல்பாட்டில் ஒரு ஒருங்கிணைந்த அதிகரிப்பை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்ததாக ஃபொக்ஸ் நியூஸின் ஊடகவியலாளர் மைக்கேல் துயிஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.
செப்டம்பரில் சித்திக்குக்கு அனுதாபமான செயற்பாடு குறைந்தபோதும் ஜனவரியில் ஒரு பெரிய அதிகரிப்பு காணப்பட்டதாக அறிக்கையொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆராய்ச்சியாளர்களின் தகவலுக்கு அமைய செயலிலுள்ள 20 கணக்குகள் உட்பட பல கணக்குகள் பாகிஸ்தானியர்களுடையது என அடையாளம் காணப்பட்டுள்ளன.
ஆஃபியா சித்திக்குக்காக நன்கு ஒருங்கிணைக்கப்பட்ட ஒன்லைன் மற்றும் ஓஃப்லைன் ஒற்றுமை பிரச்சாரம், யூத-விரோதக் கொள்கையில் ஈடுபட்டதாக ஃபொக்ஸ் நியூஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அல் கொய்தா சதித்திட்டம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சித்திக், சிப்பாயின் M4 ரக துப்பாக்கியைப் பறித்து விசாரித்தவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதற்காக சித்திக், 86 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
58 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
58 minute ago
2 hours ago
2 hours ago