Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Ilango Bharathy / 2022 செப்டெம்பர் 01 , பி.ப. 02:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
தாயின் தூக்குத் தண்டனையை சொந்த மகளே நிறைவேற்றிய கொடூர சம்பவம் ஈரானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரானில் கடந்த 13 வருடங்களுக்கு முன்பாக ‘மரியம் கர்மி‘ என்ற பெண் தன்னுடைய கணவரை தந்தை இப்ராஹிம் உதவியுடன் கொலை செய்துள்ளார்.
இப்பெண் தன்னுடைய கணவரை விவாகரத்து வழங்க மறுத்ததிற்காக கொலை செய்ததாகக் கூறப்படுகிறது.
மரியம் மற்றும் அவருடைய தந்தை இப்ராஹிம் கைது செய்யப்படுவதற்கு முன்பாக மரியமின் 6 வயது மகளிடம் அவளுடைய தாய் தந்தையர் இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.
அதன் பிறகு மரியமின் கணவருடைய பெற்றோருடன் 6 வயது சிறுமியை அனுப்பி வைத்துள்ளனர்.
இதனையடுத்து மரியம் மற்றும் இப்ராஹிம் வழக்கை விசாரித்த நீதிமன்றம் மரியமுக்கும், இப்ராஹிமுக்கும் தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கினர்.
ஆனால் ஏதோ சில காரணங்களுக்காக இப்ராஹிம்மின் தூக்கு தண்டனை தள்ளிப் போனதால் கடந்த ஜூன் மாதம் சிறையிலேயே இப்ராஹீம் கொல்லப்பட்டார். இந்நிலையில் மரியம் தற்போது தூக்கிலிடப்பட இருப்பதால் அவருடைய மகளிடம் நடந்த அனைத்து விஷயங்களையும் கூறியுள்ளனர்.
அதன்பிறகு மரியமின் 22 வயது மகளான ராஷ்டிட் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் இடத்திற்கு அழைத்து வரப்பட்டு, அம்மாவின் காலடியில் இருந்த நாற்காலியை எட்டி உதைத்து தூக்கு தண்டனை நிறைவேற்றமாறு வற்புறுத்தப்பட்டதால் வேறு வழியின்றி தன்னுடைய அம்மாவின் தூக்கு தண்டனையை மகளே நிறைவேற்றினார்.
மேலும் ஈரான் நாட்டில் இஸ்லாமிய சட்டப்படி ஒருவர் கொலை செய்யப்பட்டால் கொலை செய்த குற்றவாளிக்கு என்ன தண்டனை வழங்க வேண்டும் என்பதை அரசு தீர்மானிப்பதை விட கொலை செய்யப்பட்டவரின் உறவினர்கள் தீர்மானிப்பது தான் வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago