Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2024 ஒக்டோபர் 14 , பி.ப. 04:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
தாய்வானைச் சுற்றியுள்ள கடற்பரப்பில் ஜாயின்ட் ஸ்வார்ட் “2024பி” என்ற பெயரில் போர் ஒத்திகையை சீனா தொடங்கியுள்ளது.
தாய்வானைச் சுற்றிலும் போர் ஒத்திகை நடப்பதை சீன இராணுவம் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்ட அறிக்கையில் உறுதிப்படுத்தியுள்ளது.
தாய்வான் மீது தாக்குதல் நடத்துவதை உருவகப்படுத்தி, 9 இடங்களில் ஒத்திகை நடத்தப்படுவதாக, சீன இராணுவம் தெரிவித்துள்ளது.
தாய்வான் தீவைச் சுற்றிலும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட சீன கடலோர காவற்படையும் சில கப்பல்களை அனுப்பி வைத்துள்ளது. இந்த ஒத்திகையில் தரைப்படை, கடற்படை, விமானப்படை, ராக்கெட் படை மற்றும் பிற படையினரும் பங்கேற்றுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
7 கடற்படை போர்க் கப்பல்கள், 25 போர் விமானங்கள் மற்றும் 4 கப்பல்கள் இருப்பதை கண்டுபிடித்திருப்பதாக தாய்வான் தெரிவித்துள்ளது.
சீன கடலோர காவல்படையும் இந்த ஒத்திகையில் பங்கேற்றுள்ளது.
போர்க்கப்பல்களும், போர் விமானங்களும் பல முனைகளில் இருந்தும் கூட்டு தாக்குதல் நடத்துவதற்கான ஒத்திகையில் ஈடுபட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது.
போருக்கான தயார் நிலை, முக்கிய துறைமுகங்களை முற்றுகையிடுவது, கடல் மற்றும் தரைவழித் தாக்குதல்கள் போன்றவற்றை முன்னிறுத்தி இந்த ஒத்திகை நடப்பதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பயிற்சிகளை "பிரிவினைவாத சக்திகளுக்கு எதிரான வலுவான தடுப்பு" மற்றும் "தேசிய இறையாண்மையை பாதுகாக்க மற்றும் தேசிய ஒற்றுமையை பேணுவதற்கான சட்டபூர்வமான மற்றும் தேவையான நடவடிக்கை" என்று சீன இராணுவம் தெரிவித்துள்ளது.
அத்துடன், சீனா இராணுவத்தின் கிழக்கு படைப் பிரிவு, தாய்வானை சுற்றிலும் செய்யப்படும் போர் ஒத்திகை குறித்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், சீனாவுக்கு கண்டனம் தெரிவித்துள்ள தாய்வான், ஜனநாயகத்தையும் இறையாண்மையையும் உறுதி செய்ய தேவையான படைகளை அனுப்பியிருப்பதாகவும் சாடியுள்ளது.
22 minute ago
27 minute ago
43 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
27 minute ago
43 minute ago