Freelancer / 2025 ஜனவரி 13 , மு.ப. 11:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
சீனாவின் தன்னாட்சி பெற்ற மாகாணமாக திபெத்தில், சனிக்கிழமை (12) மீண்டும் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
சனிக்கிழமை (12) பகல் 1 மணியளவில் (இலங்கை நேரப்படி) ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.1ஆக பதிவானதாக, அந்நாட்டு தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
10 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 28.58 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 87.49 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது.
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை.
ஏற்கெனவே, திபெத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை (7), பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டின் ஷிகாட்சே நகரை மையமாக கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டது. திபெத்தில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 120க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago