2025 ஜூலை 14, திங்கட்கிழமை

திருமணத்தன்றே உயிரிழந்த மணமகள்

Ilango Bharathy   / 2023 மே 07 , மு.ப. 10:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

திருமணம் முடிந்த சில நிமிடங்களிலேயே  மணப்பெண் வீதி விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம்  அமெரிக்காவில்  பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவ தினத்தன்று தென் கரோலினா மாகாணத்தில் கடற்கரை வீதியில், திருமணம் முடிந்து மணமக்களான சமந்தா மற்றும் ஆரிக் ஹட்சின்சன் இருவரும் காரில் வீடு திரும்பிக்கொண்டிருந்துள்ளனர்.

இதன் போது  எதிரே வந்த காரொன்று எதிர்பாராத விதமாக மணமக்கள் வந்த காரின்  மீது மோதியது.

இக்கொடூர விபத்தில் சமந்தா  சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அதேசமயம் மணமகன் ஆரிக் ஹட்சின்சன் உட்பட அவரது உறவினர்கள் இருவரும் படுகாயமடைந்த நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பொலிஸாரின் விசாரணையில் ஜேமி கொமொரோஸ்கி என்ற 25வயது யுவதியே மது அருந்திவிட்டு இவ் விபத்தினை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .