2025 மே 17, சனிக்கிழமை

திருமணம் செய்ததால் வீட்டிற்குத் தீ வைப்பு

Ilango Bharathy   / 2023 ஜனவரி 05 , மு.ப. 09:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

தெலுங்கானாவில் காதல் திருமணம் செய்து கொண்ட இளைஞரின் வீட்டுக்குத் தீ வைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 ஹஜுராபாத்தைச்  சேர்ந்த ராஜசேகர் என்பவர் அதே பகுதியை சேர்ந்த சஞ்சனா என்ற பெண்ணை நீண்டகாலமாகக் காதலித்து வந்துள்ளார்.

இந்நிலையில் அண்மையில் இருவரும் பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த சஞ்சனாவின் தம்பி ‘பாலையா‘ தனது  நண்பர்களுடன் சேர்ந்து ராஜசேகர் வீட்டிற்கு சென்று தகராறில் ஈடுபட்டது மட்டுமின்றி தான் வைத்திருந்த பெட்ரோலையும் அவரது வீட்டின் மீது ஊற்றி தீ வைத்துள்ளார்.

இதில் குறித்த வீடு முழுவதுமாக தீப்பற்றி எரிந்த நிலையில் தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் வீட்டுக்குத் தீ வைத்த பாலையாவைப் பொலிஸார் தேடி வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .