Freelancer / 2024 நவம்பர் 23 , மு.ப. 10:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாகிஸ்தானில், நேற்று (22), நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில், 42 பேர் உயிரிழந்தனர்.
பாகிஸ்தானின் கைபர் பகுதுவா மாகாணத்தை சேர்ந்த சிலர் நேற்று கார், பஸ்சில் பிரசினர் நகரில் இருந்து பெஷாவர் நகருக்கு சென்றுகொண்டிருந்தனர்.
குரம் என்ற பகுதியில் சென்றுகொண்டிருந்த போது பஸ், காரை மற்றொரு காரில் வந்த கும்பல் இடைமறித்தது. மேலும், அந்த கும்பல் வைத்திருந்த துப்பாக்கிகளை கொண்டு சரமாரியாக தாக்குதல் நடத்தியது.
இந்த தாக்குதலில் 42 பேர் உயிரிழந்தனர். மேலும், சிலர் காயமடைந்தனர். தகவலறிந்து விரைந்து வந்த பொலிஸார் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள வைத்தியசாலையில் அனுமதித்தனர்.
இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உயிரிழந்த அனைவரும் ஷியா பிரிவை சேர்ந்த இஸ்லாமிய மதத்தினர் என்பது தெரியவந்துள்ளது.
தாக்குதலை நடத்தியது சன்னி பிரிவை சேர்ந்தவர்கள் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.AN
8 minute ago
39 minute ago
43 minute ago
49 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
39 minute ago
43 minute ago
49 minute ago