2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

துருக்கி நிலநடுக்கத்தை முன்பே உணர்த்திய பறவைகள்

Editorial   / 2023 பெப்ரவரி 07 , மு.ப. 10:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

துருக்கி நாட்டில் திங்கட்கிழமை அதிகாலையில் ஏற்படப்போகும் மிகப்பெரிய இயற்கை பேரழிவினை பறவைகள் கூட்டம் முன்னதாகவே உணர்த்தியுள்ளன.

அதேபோல மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்படும் என்று 3 நாட்களுக்கு முன்னதாகவே ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் டச்சு ஆராய்ச்சியாளர். அவரது ட்வீட் தற்போது சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

துருக்கி, சிரியா என இரண்டு நாடுகளுமே மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. இருப்பினும் துருக்கியில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.

பொதுவாக மிகப்பெரிய துயரம் ஏற்படும் முன்பாக அதை இயற்கையானது உணர்த்தும். பறவைகள், விலங்குகளுக்கு இயற்கை பேரிடர் முன்கூட்டியே தெரியவரும்.

இந்நிலையில், பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்த நிலநடுக்கம் ஏற்படும் முன்னர் பறவைகள் காசியான்டேப் சுற்றி வட்டமடித்துள்ள காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றன. நிலநடுக்கத்தை உணர்த்தவே பறவைகள் அவ்வாறு பறந்து திரிந்ததாக சமூக வலைதளத்தில் பலரும் கருத்து பதிவிட்டனர்.

இதனிடையே, டச்சு ஆராய்ச்சியாளர் ஒருவர் துருக்கி, சிரியா நாட்டில் நிலநடுக்கம் ஏற்படப்போகிறது என்று மூன்று நாட்களுக்கு முன்பு கணித்திருக்கிறார் .

 ஃப்ராங்க் கூகர்பீட்ஸ் என்ற அந்த ஆராய்சியாளர், துருக்கி, சிரியாவில் நிலநடுக்கம் ஏற்படும் என்று மூன்று நாட்களுக்கு முன்பே கணித்து அதை பிப்ரவரி 3ம் திகதி ட்வீட் செய்துள்ளார்.

அவரது ட்விட்டர் பதிவில் "மத்திய மற்றும் தெற்கு துருக்கி, ஜோர்டான், சிரியா, லெபனான் ஆகிய பகுதிகளைக் குறிப்பிட்டு 7.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது என்று வரைபடத்துடன் கூறியிருக்கிறார். அவரது பதிவு சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X