Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Freelancer / 2022 ஜூன் 07 , பி.ப. 10:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
சர்வதேச சட்டத்தை அப்பட்டமாக மீறி, ஏப்ரல் 16 ஆம் திகதியன்று ஆப்கானிஸ்தான் எல்லைக்குள் பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதல் இரு நாடுகளுக்கும் இடையே இராஜதந்திர மோதலை உருவாக்கியுள்ளது.
தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் அல்லது பாகிஸ்தான் தலிபான்களின் வன்முறைச் செயல்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்த வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது என்று ஆப்கானிய டயஸ்போறா வலையமைப்பில் எழுதும் ஹமித் பாக்டீன் தெரிவித்துள்ளார்.
எனினும், பாகிஸ்தானின் இந்த தாக்குதலில் உயிரிழந்த 45 பேரில் 20 சிறுவர்கள் அடங்குகின்றனர். கோஸ்ட் மாகாணத்தில் 12 பெண்கள் மற்றும் 3 சிறுவர்களும் குனார் மாகாணத்தில் 3 பெண்கள் மற்றும் 2 சிறுவர்களும் உயிரிழந்தனர்.
ஆப்கானின் நடைமுறை அரசாங்கமான தலிபான்கள், காபூலில் உள்ள பாகிஸ்தான் தூதரை வரவழைத்து கண்டனம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் விமானப்படையினர் ஆப்கானுக்குள் நடத்திய வான்வழித் தாக்குதல்கள் "பிராந்தியத்துக்கு எதிரான ஆக்கிரமிப்பு" என்று ஐ.நா.வுக்கான ஆப்கானிஸ்தானின் நிரந்தர தூதரகத்தின் பொறுப்பாளர் நசீர் அஹமட், பாக். பாதுகாப்பு சபையின் தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
பாகிஸ்தானின் நடவடிக்கைகள், படையைப் பயன்படுத்துவதை நிர்வகிக்கும் வழக்கமான மற்றும் ஒப்பந்தச் சட்டத்துக்கு முரணானது மட்டுமல்லாமல், அவை ஜெனீவா ஒப்பந்தங்களை முற்றிலும் மீறியதால் போர்க்குற்றங்களாக உள்ளன என்றும் பாக்டீன் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், இந்த தாக்குதல்கள் ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் எல்லையின் பதற்றமான பகுதியில் பாரிய அச்சுறுத்தல்களை ஏற்படுத்துகின்றன.
கிழக்கு ஆப்கானிஸ்தானில், சமீபத்திய வான்வழித் தாக்குதல்கள் காரணமாக மேலும் வன்முறைகள் நடக்கலாம் என்றும் ஒருவேளை முழு அளவிலான போராக விரிவடையும் என்றும் பலர் அஞ்சுகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago