Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2024 டிசெம்பர் 08 , மு.ப. 11:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
பங்களாதேசத்தின் தலைநகர் டாக்காவின் நம்ஹட்டா பகுதியில் இஸ்கான் மையம் தீவைத்து எரிக்கப்பட்டுள்ளது.
அந்த வளாகத்தில் இருந்த கோவிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டு இருந்த ஸ்ரீ லஷ்மி நாராயண் உள்ளிட்ட கடவுள் சிலைகள் தீவைத்து எரிக்கப்பட்டுள்ளன.
இந்த சம்பவத்தில் கோவில் முழுவதும் சேதமாகியுள்ளது.
சனிக்கிழமை(07) அதிகாலை 2 மணி முதல் 3 மணிக்குள் இந்த கோவிலுக்குள் புகுந்த மர்ம நபர்கள், சிலைகளுக்கு தீவைத்துள்ளனர்.
இதுதொடர்பாக அந்நாட்டு அரசாங்கத்திடம் இஸ்கான் சார்பில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆனால், போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகளை பொலிஸாரும், அரசு அதிகாரிகளும் எடுக்கவில்லை. என்று தெரிவிக்கப்படுகின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .