Editorial / 2018 மே 18 , மு.ப. 01:14 - 0 - {{hitsCtrl.values.hits}}

மலேஷியாவில் அண்மையில் தோற்கடிக்கப்பட்ட பிரதமர் நஜீப் ரஸாக்கின் வீடு, அலுவலகம் உட்பட அவரோடு சம்பந்தப்பட்ட 5 இடங்களில், பொலிஸாரால் தேடுதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நேற்று முன்தினம் (16) இரவு ஆரம்பித்த இத்தேடுதல்கள், நேற்று (17) காலை வரை நீடித்தன.
இத்தேடுதல்கள் தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த முன்னாள் பிரதமரின் சட்டத்தரணியொருவர், கைப்பைகள் உட்பட சில தனிப்பட்ட பொருட்களை, பொலிஸார் கைப்பற்றினர் எனக் குறிப்பிட்டார்.
மலேஷியாவின் அபிவிருத்தி நிதியத்தில், பல பில்லியன் ஐ.அமெரிக்க டொலர்கள் கணக்கிலான மோசடி இடம்பெற்றுள்ளது எனவும், அதில் அப்போதைய பிரதமரான நஜீப்புக்குத் தொடர்புள்ளது எனவும், கடுமையான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. அண்மையில் நடைபெற்ற பொதுத் தேர்தலில், நஜீப்பின் தோல்விக்கு, இக்குற்றச்சாட்டுகள் முக்கிய காரணங்களாக அமைந்தன எனக் கருதப்படுகிறது.
பதவிக்கு வந்தால், நஜீப் மீது விசாரணைகள் மேற்கொள்ளப்படுமென, மஹதீர் மொஹமட் தெரிவித்திருந்த நிலையிலேயே, பதவியேற்றுச் சில நாட்களில் இத்தேடுதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
இதில், நஜீப் தங்கியிருக்கும் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டுள்ளது. ரமழான் தொழுகைக்குப் பிறகு, வீட்டுக்கு நஜீப் வந்த பின்னரே, அவரது வீட்டில் சோதனை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
பணச்சலவைச் சட்டத்தின் கீழேயே, இத்தேடுதல்கள் மேற்கொள்ளப்பட்டன என, நஜீப்பின் சட்டத்தரணி குறிப்பிட்டார்.
நஜீப்பின் காலத்தில், இவ்விடயம் தொடர்பான விசாரணைகள் இடம்பெற்ற போதும், நஜீப் மீது தவறில்லையென, சட்டமா அதிபரால் முடிவுசெய்யப்பட்டது. ஆனால், மஹதீர் பதவியேற்ற பின்னர், சட்டமா அதிபர் உள்ளிட்ட பலர் மாற்றப்பட்ட பின்னணியிலேயே, இச்சோதனைகள் இடம்பெற்றுள்ளன.
36 minute ago
57 minute ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
57 minute ago
9 hours ago