2025 மே 03, சனிக்கிழமை

நடுவானில் காதலிக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த இளைஞர்

Ilango Bharathy   / 2023 ஜனவரி 17 , மு.ப. 10:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

நடுவானில் வைத்து தனது வருங்கால மனைவிக்கு  இளைஞர் ஒருவர் இன்ப அதிர்ச்சி கொடுத்த சம்பவம் இணையத்தில்  வைரலாகி வருகின்றது.

 கடந்த 2ஆம் திகதி லண்டனிலிருந்து ஹைதராபாத் வழியாக மும்பைக்கு ஏர் இந்தியா விமானம் ஒன்று பயணித்துள்ளது.

குறித்த விமானத்தில் தனது வருங்கால மனைவி, பயணம் செய்யவுள்ளார் என்பதை தனது  நண்பர் மூலம் அறிந்து கொண்ட இளைஞர் ஒருவர், அதே விமானத்தில் தனக்கும் டிக்கெட் புக்கிங் செய்துள்ளார்.

இந்நிலையில் சம்பவ தினத்தன்று, விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது, திடீரென  எழுந்து தனது காதலியின்  இருக்கை அருகே சென்ற இளைஞர், அவர் முன்பு   மண்டியிட்டு தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டுள்ளார்.

அதைப் பார்த்து அதிர்ச்சியும் ஆனந்தமும் அடைந்த அப்பெண், இளைஞரை ஆரத்தழுவிக்  கொண்டார்.

இந்த நெகிழ்ச்சியான சம்பவமானது இணையத்தில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X