Editorial / 2019 மே 14 , மு.ப. 06:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்திய நாடாளுமன்றின் 6ஆம் கட்டத் தேர்தலை, உலக நாடுகளைச் சேர்ந்த தேர்தல் திணைக்களப் பிரதிநிதிகள் கண்காணித்துள்ளனர்.
இதன்படி, ரஷ்யா, மியன்மார், பூட்டான், கம்போடியா, போஸ்னியா, பங்களாதேஷ், கென்யா, மெக்சிகோ, மலேசியா, இலங்கை உள்ளிட்ட 10 நாடுகளைச் சேர்ந்த தேர்தல் பிரதிநிதிகள் குறித்த தேர்தலைக் கண்காணித்துள்ளனர்.
வடக்கு டெல்லி, தெற்கு டெல்லி ஆகிய தொகுதிகளில் அமைக்கப்பட்ட 12 வாக்குச்சாவடிகளை, இந்தப் பிரதிநிதிகள் நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர்.
இது குறித்து கருத்துத் தெரிவித்துள்ள ரஷ்ய தேர்தல் பிரதிநிதி, மின்னணு வாக்கு இயந்திரங்கள் இயங்குவதைப் பார்க்க அருமையாக இருப்பதாகக் கூறியுள்ளா்.
இந்திய நாடாளுமன்றத் தேர்தல் ஏழு கட்டங்களாக இடம்பெறும் நிலையில், நேற்று முன்தினம் (12) 6ஆம் கட்ட தேர்தல் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
35 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
1 hours ago
1 hours ago