Mithuna / 2024 பெப்ரவரி 29 , பி.ப. 03:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
தெற்கு சீனாவின் குவாங்டாங் நகரில், நடை பயிற்சி சென்று கொண்டிருந்தார் லின் என்ற பெண். அவர் கையில் பிடித்திருந்த நாய், ஒரு கடைக்கு அருகே வந்தபோது திடீரென அவரது பிடியில் இருந்து நழுவி கடைக்குள் ஓடியது. அங்கு வைக்கப்பட்டிருந்த லொட்டரி டிக்கெட் ஒன்றை கவ்விப்பிடித்தது. இதையடுத்து அவர் அதை வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
இறுதியில் அந்த சுரண்டல் லொட்டரிக்கு 139 டொலர் பரிசு விழுந்திருந்தது. இதனால் லின் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். இதனால் மறுநாள் அவராகவே தனது நாயை மீண்டும் கடைக்கு அழைத்துச்சென்று ஒரு லொட்டரியை கவ்வச்செய்தார்.
அப்போது, அவருக்கு 4 டொலர் பரிசு விழுந்தது. அதிர்ஷ்டத்தை தேடித்தந்த நாய்க்கு பரிசுத்தொகையில் ஒரு பகுதிக்கு உணவு வாங்கிக் கொடுத்ததாக லின் தெரிவித்துள்ளார்.
4 hours ago
5 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago
5 hours ago
5 hours ago