S.Renuka / 2026 மார்ச் 22 , மு.ப. 11:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
மத்திய கிழக்கில் ஈரானின் தீவிரவாத ஆட்சிக்கு எதிரான அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கைகள் இலக்குகளை எட்டி வருவதால், அந்த நடவடிக்கைகளைக் கைவிடுவது குறித்துப் பரிசீலிப்பதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது சமூக வலைத்தளப் பதிவில் தெரிவித்துள்ளார்.
ஈரானின் ஏவுகணை மற்றும் ஆயுத உற்பத்தி ஆலைகள், கடற்படை மற்றும் விமானப் படைகள் அழிக்கப்பட்டுள்ளதாகவும், இனி அந்த நாட்டால் அணு ஆயுதங்களை உற்பத்தி செய்ய முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஈரானின் அச்சுறுத்தல்கள் நீங்கினால் ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்து சீராகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னதாக, இலக்குகள் நிறைவேறும் வரை போர் நிறுத்தத்திற்கு வாய்ப்பில்லை என்று செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்த ட்ரம்ப், அடுத்த சில மணி நேரங்களிலேயே இராணுவ நடவடிக்கையைக் கைவிடுவது பற்றிப் பேசியிருப்பது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
8 hours ago
8 hours ago
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
8 hours ago
8 hours ago