Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Freelancer / 2023 ஓகஸ்ட் 10 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
அரை நூற்றாண்டு கடந்த பின்னர் நிலவுக்கு மனிதனை அனுப்பும் திட்டத்தை அமெரிக்காவின் நாசா ஆராய்ச்சி கழகம் கையில் எடுத்துள்ளது. இந்த கனவு திட்டத்திற்கு உறுதுணையாக எலான் மஸ்கின் ஸ்பெக்ஸ் எக்ஸ் நிறுவனம், இந்தியாவின் இஸ்ரோ ஆராய்ச்சி மையம் உள்பட உலகின் முன்னணி நிறுவனங்கள் உதவுகிறது.
இதற்கான திட்டத்தை ஆர்திமிஸ் என பெயரிட்டு கடந்த 2017-ம் ஆண்டு முதல் விண்கலன்களை தயாரித்து வருகின்றன. இந்தநிலையில் ஆர்திமிஸ் 2 திட்டத்தை முன்னெடுத்து அடுத்த ஆண்டு இறுதிக்குள் நிலவுக்கு மனிதனை அனுப்ப நாசா தயாராகி வருகிறது.
அதற்காக ஒரு பெண் விண்வெளி வீராங்கனை உள்பட 4 பேர் பயிற்சி பெற்று வருகிறார்கள். இந்நிலையில் தங்களை நிலவுக்கு அழைத்து செல்லும் ஓரியன் விண்கலத்தை முதல்முறையாக விண்வெளி வீரர்கள் நேரில் சென்று பார்த்தனர்.
புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் வைத்து ஓரியன் விண்கலத்தை ஆராய்ச்சியாளர்கள் பரிசோதித்து வருகிறார்கள். தங்களை உற்சாகப்படுத்தி கொள்ளவும் ஆயத்தப்பணிகளை முடுக்கி விடும் பணிக்காக விண்வெளி வீரர்கள் நிலவுக்கு அழைத்து செல்லவிருக்கும் விண்கலத்தை நேரில் பார்க்க அனுமதி வழங்கப்பட்டதாக நாசா அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் இந்த விண்கலத்தின் உறுதித்தன்மையை பரிசோதிக்கும் வகையில் பல்வேறு சோதனைகளுக்கு ஆராய்ச்சியாளர்கள் உட்படுத்தி வருகிறார்கள்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
4 hours ago