2025 ஓகஸ்ட் 29, வெள்ளிக்கிழமை

நீதிமன்ற வாசலில் வீசப்பட்ட மனிதத் தலையால் பரபரப்பு

Ilango Bharathy   / 2022 ஜூலை 01 , பி.ப. 12:11 - 0     - {{hitsCtrl.values.hits}}



ஜேர்மனியில்  நீதிமன்றம் அருகே  மர்ம நபர்கள் சிலர் மனிதத் தலையொன்றை வீசிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
ஜேர்மனியில் பான் என்ற பகுதியில்  அமைந்துள்ள நீதிமன்றத்தின் முன்பாகவே கடந்த 28 ஆம் திகதி இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
 
அதே சமயம் நீதிமன்றத்தில் இருந்து சற்று தொலைவில்,  தலையில்லாத உடல் ஒன்றும் பொலிஸாரால்  கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இது தொடர்பாக 38 வயது மதிக்கத்தக்க ஒருவரை பொலிஸார்  சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .