2025 மே 17, சனிக்கிழமை

நீதிமன்றத்தில் வைத்து மகளைக் கொன்ற தந்தை

Ilango Bharathy   / 2023 ஜனவரி 26 , மு.ப. 10:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

நீதிமன்றத்தில் வைத்து  நபர் ஒருவர் தனது மகளை துப்பாக்கியால் சுட்டுக் கொலைசெய்த சம்பவம் பாகிஸ்தானில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானின் வஜிரிஸ்தான் மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர், கராச்சியைச்  சேர்ந்த வைத்தியர் ஒருவரைக் காதலித்து வந்துள்ளார்.

இதற்கு அப் பெண்ணின் குடும்பத்தின் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில்  தனது வீட்டை விட்டு வெளியேறிய அப்பெண், தனது காதலரை கரம் பிடித்துள்ளார்.

எனினும் அப்பெண்ணின் தந்தை, ‘தனது பெண்ணை, வைத்தியர் கடத்திச் சென்றுவிட்டதாக கராச்சி பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

 இந்நிலையில் ”தான் கடத்தப்படவில்லை என்றும், விருப்பப்பட்டே திருமணம் செய்து கொண்டதாகவும்” கூறுவதற்காக, குறித்த பெண் நேற்று முன்தினம் கராச்சியில் உள்ள நீதிமன்றத்துக்குச் சென்றுள்ளார்.

அப்போது அங்கு வந்திருந்த பெண்ணின் தந்தை, நீதிமன்ற வளாகத்துக்குள் வைத்து  தனது மகளை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துள்ளார்.

இதில் அவர்  சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் இந்த துப்பாக்கி சூட்டில் பொலிஸ் அதிகாரி  ஒருவரும் படுகாயம் அடைந்துள்ளார்.

இந்நிலையில் குறித்த நபரை பொலிஸார் கைதுசெய்து சிறையில் அடைத்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில்  அண்மைக்காலமாக ஆணவக் கொலைகள் அதிகரித்து வருவதாகவும்,கடந்த 10 ஆண்டுகளில் மாத்திரம் 650 ஆணவக்கொலைகள் நடந்துள்ளதாகவும்   தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .