2026 மே 14, வியாழக்கிழமை

நீருக்குள் செல்லும் மிக நீண்ட சுரங்கப்பாதை அமைத்த பிரபல நாடு

Ilango Bharathy   / 2022 ஜனவரி 06 , மு.ப. 07:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் உள்ள தைஹூ என்ற ஏரியில் நீருக்குள் செல்லும் மிக நீண்ட  நெடுஞ்சாலைச் சுரங்கப்பாதையை (underwater highway tunnel)அந்நாட்டு அரசு பொதுமக்கள் பாவனைக்காக  அண்மையில் திறந்து வைத்துள்ளது.

நான்கு ஆண்டுகளில் ஏறத்தாழ 1.56 பில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவில் கட்டப்பட்ட இச் சுரங்கப்பாதையானது 11 கிலோ மீற்றர் நீளம் கொண்டது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இதனை கட்டமைக்க 2 மில்லியன் கனமீட்டருக்கும் அதிகமான கொன்கிரீட் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் 18 மீற்றர் அகலத்தில் 6 பாதைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஓட்டுநர்களின் சோர்வைப் போக்கும் வகையில் வண்ணமயமான எல்இடி விளக்குகளும் இப் பாலத்தினுள் பொருத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .