Ilango Bharathy / 2022 மார்ச் 07 , பி.ப. 07:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
உக்ரேன் மீது ரஷ்யா கடந்த 24ஆம் திகதியிலிருந்து தாக்குதல் நடத்தி வருகிறது. அதேபோல் உக்ரேனும் தம்மை தற்காத்துக் கொள்ள ரஷ்ய படைகள் மீது பதில் தாக்குதல் நடத்தி வருகின்றது.
இம் மோதலில் இரு நாடுகளிலும் அதிக அளவில் உயிர்இழப்புக்களும்,பொருள் சேதங்களும் ஏற்பட்டுள்ளன.

இந்நிலையில் உக்ரேன் மீதான ரஷ்யாவின் தாக்குதல்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக புகழ்பெற்ற தொழில்நுட்ப நிறுவனங்களா மைக்ரோசொப்ட், அப்பிள் மற்றும் சர்வதேச பணப்பரிவர்த்தனை நிறுவனங்களான விசா மற்றும் மாஸ்டர் கார்ட் உள்ளிட்ட பல நிறுவனங்கள் தமது சேவையை ரஷ்யாவில் நிறுத்தியுள்ளன.
அந்தவகையில் தற்போது ‘நெட்பிளிக்ஸ்‘(Netflix) நிறுவனமும் தமது சேவையை ரஷ்யாவில் நிறுத்தியுள்ளதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நெட்பிளிக்ஸ் எடுத்த அதிரடித் தீர்மானத்தால் ரஷ்யாவில் உள்ள ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
3 hours ago
7 hours ago
7 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
7 hours ago
7 hours ago
9 hours ago