2025 மே 17, சனிக்கிழமை

நேபாளம் விமான விபத்தில் 40 உடல்கள் மீட்பு

Editorial   / 2023 ஜனவரி 15 , பி.ப. 03:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

நேபாளத்தில் உள்ள போக்கரா சர்வதேச விமான நிலையம் அருகே எட்டி ஏர்லைன்ஸ் விமானம் ஞாயிற்றுக்கிழமை (14) விபத்துக்குள்ளானது.

விமான விபத்து நடந்த பகுதியிலிருந்து 40 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர்  தெரிவித்துள்ளார்.

காஸ்கி மாவட்ட உதவி தலைமை அதிகாரி குருதத்தா தாகல், இரண்டு பேர் உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். ஆனால், அவர்களுடைய நிலை கவலைக்கிடமாக உள்ளதாகக் கூறப்படுகிறது என்று கூறினார்.

“விபத்துப் பகுதியிலிருந்து இரண்டு பேர் உயிருடன் கண்டுபிடிக்கப்படுள்ளனர்,” என்று தாகல் கூறினார்.

“செட்டி கோஞ்சில் காணாமல் போனதாக சந்தேகிக்கப்படும் நபர்களைத் தேடுவதற்காக மீட்புப் பணியாளர்கள் கயிற்றில் தொங்கியபடி இறங்கியுள்ளார்கள்,” என்று அவர் கூறினார்.

விமானப் பயணிகளில் 53 நேபாள குடிமக்களும் 5 இந்தியர்களும் இருந்ததாக நேபாளத்தின் சிவில் விமானப் போக்குவரத்து ஆணைய செய்தித் தொடர்பாளர் கூறினார்.

ரஷ்யாவை சேர்ந்த 4 பயணிகள், கொரியாவிலிருந்து இரண்டு பயணிகள் மற்றும் அயர்லாந்து, ஆஸ்திரேலியா, அர்ஜென்டினா, பிரான்ஸ் ஆகிய நாடுகளில் இருந்து தலா ஒரு பயணியும் இருந்ததாகக் கூறினார்.

 

   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .