Editorial / 2020 ஜனவரி 09 , மு.ப. 10:22 - 0 - {{hitsCtrl.values.hits}}

வடகிழக்கு நைஜீரியாவிலுள்ள நகரமொன்றின் மீதான ஆயுததாரிகளின் தாக்குதலொன்றில் ஏறத்தாழ 20 படைவீரர்கள் கொல்லப்பட்டதாகவும், ஏறத்தாழ 1,000 பேர் வீடற்றவர்களாகியுள்ளதாகவும், அங்கு வசிப்பவர்கள் இருவரும், இராணுவத் தகவல்மூலமொன்றும் நேற்று தெரிவித்துள்ளனர்.
பொர்னோ மாநிலத்திலுள்ள மொன்குனோ என்ற குறித்த நகரத்துக்குள் படைவீரர்கள் தொடரணியொன்றாக காட்சியளித்து நேற்று முன்தினம் ஆயுததாரிகள் நுழைந்துள்ளனர்.
பின்னர் இந்நகரத்திலுள்ள படைகளை அவர்கள் தாக்கியுள்ளதுடன், குறைந்தது 750 வீடுகளை அழித்துள்ளனர்.
இந்நிலையில், பாதுகாப்புக்காக மோதலின்போது புல்லுக்குள் மக்கள் சென்றதாகவும், துப்பாக்கிச் சன்னங்களால் மூன்று பொதுமக்கள் கொல்லப்பட்டதாக அங்குள்ள ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கருத்துத் தெரிவிக்க இராணுவப் பேச்சாளரொருவர் மறுத்த நிலையில், தாக்குதலுக்கு உடனடியாக எக்குழுவும் உரிமை கோரியிருக்கவில்லை.
18 minute ago
43 minute ago
49 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
43 minute ago
49 minute ago