2025 செப்டெம்பர் 06, சனிக்கிழமை

நைஜீரியாவில் படகு மூழ்கியதில் 60 பேர் பலி

Shanmugan Murugavel   / 2025 செப்டெம்பர் 04 , மு.ப. 08:45 - 0     - {{hitsCtrl.values.hits}}


நைஜீரியாவின் வட மத்திய நைகர் மாநிலத்தில் 100 பயணிகளுக்கும் அதிகமானோரைக் கொண்ட படகொன்று மூழ்கியதில் குறைந்தது 60 பேர் உயிரிழந்ததுடன், டசின் கணக்கானோர் மீட்கப்பட்டதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

படகானது மலாலே மாவட்டத்தின் துங்கால் சுலே நகரத்திலிருந்து செவ்வாய்க்கிழமை (02) பிற்பகல் 3.30 மணிக்கு புறப்பட்டு கைஞ்சி நீர்த்தேக்கத்திலுள்ள டுக்கா நகரை நோக்கிச் சென்றுள்ளது. 

மூழ்கியிருந்த மர அடியில் மோதியதையடுத்தே இச்சம்பவம் இடம்பெற்றதாக நைகர் அவசரகால முகாமைத்துவ முகவரகம் புதன்கிழமை (03) தெரிவித்துள்ளது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .