Ilango Bharathy / 2022 ஏப்ரல் 12 , மு.ப. 09:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
சீனாவில் கொரானாத் தொற்றுப் பரவலானது மீண்டும் தலைதூக்கியுள்ளது.
குறிப்பாக அந்நாட்டின் மிக பெரிய வர்த்தக நகரமாகத் திகழும் ஷாங்காயானது கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கித் தவித்து வருகின்றது.

இதன்காரணமாக ஷாங்காய் மாகாணத்தில் 3 வாரங்களாக ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதோடு பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் ஊரடங்கு காரணமாக உணவின்றித் தவித்துவரும் மக்களைக் கருத்திற் கொண்டு, இரண்டு நாட்களுக்கு ஒரு தடவை உணவு பொருட்களையும், அத்தியாவசிய பொருட்களையும் வாங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
எனினும் ஷாங்காயில் தற்போது உணவுத்தட்டுபாடு ஏற்பட்டுள்ளதால் மக்கள் உணவினைப் பெற்றுக்கொள்வதில் பெரும் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அப்பகுதியொன்றில் உள்ள உணவகமொன்றில், மக்கள் போட்டிப் போட்டுக் கொண்டு உணவுகளைத் திருடி சென்ற காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
அத்துடன் இதே நிலை நீடித்தால் அத்தியாவசியப் பொருட்களுக்கும், மருந்துகளுக்கும், தட்டுப்பாடு ஏற்படும் நிலை அங்கு உருவாகலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2 hours ago
6 hours ago
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago
6 hours ago
7 hours ago