2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

பச்லெட்டின் சீன விஜயத்தை கடுமையாக சாடும் உய்குர்கள்

Freelancer   / 2022 ஜூன் 01 , பி.ப. 07:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான உயர் ஸ்தானிகர், மிச்சேல் பச்லெட்டின் சின்ஜியாங் பயணம் உட்பட சீன விஜயத்தின் வெளிப்பாடுகளால் கடும் ஏமாற்றமடைந்துள்ளதாக உலக உய்குர் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. 

தாம் அஞ்சியதைப் போல, சீனாவின் மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் மற்றும் உய்குர் மக்களுக்கு எதிரான இனப்படுகொலைகளை வெள்ளையடிப்பதற்கான "பிரச்சார வாய்ப்பாக" இந்த விஜயம் மாறியுள்ளது என, மனித உரிமைகள் குழுக்கள் தெரிவிக்கின்றன.

எதிர்பார்த்தைப் போலவே, உய்குர் இனப்படுகொலையை விசாரித்து உய்குர் மக்களுக்கு நீதி வழங்குவதற்கான வரலாற்று வாய்ப்பை உயர் ஸ்தானிகர் வீணடித்துவிட்டார் என்று உலக உய்குர் காங்கிரஸ் தலைவர் டோல்குன் இசா குறிப்பிட்டார். 

உய்குர்களுக்கான நீதி மற்றும் பொறுப்பானவர்களுக்கான பொறுப்புக்கூறல் ஆகியவற்றை எந்த வகையிலும் போதுமான அளவில் கவனிக்காத பயணத்தை சீனாவின் விருப்பத்துக்கு இணங்கி நடத்திய உயர்ஸ்தானிகர், தனது அலுவலகத்தின் நம்பகத்தன்மையை அழித்துவிட்டார் என்றும் அவர் கூறினார்.

உயர்ஸ்தானிகரின் திட்டமிடப்பட்ட விஜயத்தில், கிழக்கு துர்கிஸ்தானுக்கு (சின்ஜியாங்) தடையற்ற அணுகல் மற்றும் பாதிக்கப்பட்ட உய்குர்களுடன் அந்த சாட்சிகளுக்கு பழிவாங்கும் அல்லது மிரட்டலுக்கு பயப்படாமல் சுதந்திரமாக பேசும் திறன் போன்ற சில நிபந்தனைகளை வருகை அர்த்தமுள்ளதாக இருக்க பூர்த்தி செய்திருக்க வேண்டும் என்று உரிமைக் குழுக்கள் வலுவாக வலியுறுத்தியுள்ளன.
 
மேலும், கிழக்கு துர்கிஸ்தானில் மனித உரிமை மீறல்கள் தொடர்பான உயர்ஸ்தானிகரின் சுயாதீன அறிக்கை எவ்வாறு வெளியிடப்பட உள்ளது என்பதை உலக உய்குர் காங்கிரஸ் சுட்டிக்காட்டியுள்ளது.

கிழக்கு துருக்கிஸ்தானில் நிகழும் அட்டூழிய குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை பற்றிய விசாரணை விஜயம் அல்ல என்பதை உயர்ஸ்தானிகரின் செய்தி அறிக்கை உறுதிப்படுத்துகிறது என உலக உய்குர் காங்கிரஸ் கூறியுள்ளது.

தொழிற்கல்வி மற்றும் பயிற்சி மையங்களில் இடம்பெற்ற மீறல்களின் முழு அளவையும் தன்னால் மதிப்பீடு செய்ய முடியவில்லை என்று பச்லெட் குறப்பிட்டிருந்தார்.

ஐநா உரிமைகள் உயர்ஸ்தானிகரின்  சீனப் பயணம் விசாரணையாக இருக்காது என்றும் மாறாக "மனித உரிமைகளை ஊக்குவிக்கும், பாதுகாக்கும் மற்றும் மதிக்கும்" என்று ஊடக அறிக்கைகள் முன்னர் குறிப்பிட்டிருந்தன.  

பச்லெட்டின் மிகவும் ஏமாற்றமளிக்கும் விஜயத்தைத் தொடர்ந்து, கிழக்கு துர்கிஸ்தானின் நிலைமையைப் பற்றிய அவரது சுயாதீன மதிப்பீட்டை வெளியிடுமாறு, அவரது அலுவலகத்தை உலக உய்குர் காங்கிரஸ் கடுமையாக வலியுறுத்தியது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X