Editorial / 2019 டிசெம்பர் 05 , மு.ப. 09:52 - 0 - {{hitsCtrl.values.hits}}

மேற்கு ஆபிரிக்க நாடான மெளரித்தானியாவின் கரையோரத்துக்கு அப்பாலுள்ள அத்லாண்டிக் சமுத்திரத்தில், குறைந்தது 150 அகதிகளைக் காவிச் சென்ற படகு மூழ்கியதில், சிறுவர்கள், பெண்கள் உள்ளடங்கலாக குறைந்தது 58 பேர் கொல்லப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகளின் புகலிட முகவரகமான புகலிடத்துக்கான சர்வதேச நிறுவனம் நேற்று தெரிவித்துள்ளது.
மெளரித்தானியாவை அணுகும்போது குறைந்தது 150 பேரைக் கொண்ட குறித்த படகானது குறைவாக எரிபொருளைக் கொண்டிருந்ததாக அறிக்கையொன்றில் புகலிடத்துக்கான சர்வதேச நிறுவனம் கூறியுள்ளது.
நீந்தி 83 பேர் கரையை அடைந்ததாகத் தெரிவித்த புகலிடத்துக்கான சர்வதேச நிறுவனம், உயிர் தப்பியர்வர்களுக்கு வட நகரமான நெளவாடிபெளவிலுள்ள மெளரித்தானிய அதிகாரிகள் உதவியதாகத் தெரிவித்துள்ளது.
படகில் சிறுவர்களும், பெண்களுமாக படகானது கடந்த மாதம் 27ஆம் திகதி காம்பியாவிலிருந்து புறப்பட்டதாக உயிர்தப்பியவர்கள் கூறியுள்ளனர்.
இந்நிலையில், நெளவாடிபெளவிலுள்ள வைத்தியசாலைக்கு அடையாளந்தெரியாத எண்ணிக்கையான காயமடைந்தோர் எடுத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
அந்தவகையில், ஐரோப்பாவை அடையும் நம்பிக்கைகளுடன் பல அகதிகள் புறப்படும் சிறிய மேற்கு ஆபிரிக்க நாடான காம்பியாவிலுள்ள அதிகாரிகளிடமிருந்து உடனடியாக அறிக்கை எதுவும் வெளியாகியிருக்கவில்லை.
காம்பியா சிறிய நாடாக இருக்கின்றபோதும், 2014ஆம் ஆண்டுக்கும் 2018ஆம் ஆண்டுக்கிடையில், புகலிடத்துக்கான சர்வதேச நிறுவனத்தின் தரவுப்படி 35,000க்கும் அதிகமாக காம்பிய அகதிகள், ஐரோப்பாவுக்குச் சென்றுள்ளனர்.
20 minute ago
45 minute ago
51 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
45 minute ago
51 minute ago