Ilango Bharathy / 2022 டிசெம்பர் 20 , மு.ப. 09:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான எலோன் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தை கைப்பற்றியதிலிருந்து, அதில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
குறிப்பாக டுவிட்டர் நிறுவனத்தின் தலைமை செயற்பாட்டு அதிகாரி- பராக் அகர்வால் உட்பட முக்கிய பதவிகளில் கடமையாற்றி வந்த பலரை பணிநீக்கம் செய்தார்.

அத்துடன் டுவிட்டரில் அதிகாரபூர்வக் கணக்குகளுக்கு வழங்கப்படும் ‘நீல வண்ண டிக் குறியீட்டினைப் பயன்படுத்துவதற்கு 8 டொலர்கள் வசூலிக்கும் திட்டத்தினையும் அமுல்படுத்தினார்.
அத்துடன் தனிப்பட்ட நபர்களின் தகவல்களை வெளியிடுவதாகக் கூறி, பிரபல ஊடகவியலாளர்களின் டுவிட்டர் கணக்குகளையும் முடக்கி வருகின்றார்.
இந்நிலையில் எலோன் மஸ்கின் இத்தகைய செயற்பாடுகள் மக்கள் மத்தியில் மன உளைச்சலை ஏற்படுத்துவதாக ஐ.நாவின் உலகளாவிய தகவல் தொடர்புகளுக்கான துணைப் பொதுச்செயலாளர் மெலிசா பிளவ்மிங் அண்மையில் தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து தற்போது ”டுவிட்டரின் தலைமை நிர்வாக அதிகாரி பதவியில் இருந்து நான் விலக வேண்டுமா? ”என்ற கருத்துக்கணிப்பை எலான் மஸ்க் தொடங்கியுள்ளார்.
இக் கருத்துக் கணிப்பின் படி 57.6 சதவீதத்திற்கும் அதிகமான பயனர்கள் 'ஆம்' என்றும், சுமார் 42.4 சதவீதம் பேர் 'இல்லை' எனவும் பதில் அளித்துள்ளனர்.
முன்னதாக, டுவிட்டரின் தலைமை நிர்வாக அதிகாரியாக நீண்ட காலம் பணியாற்ற விரும்பவில்லை எனவும், அவ்வேலைக்கு வேறு ஒருவரைக் நியமிப்பேன் என்றும் சூசகமாகத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
26 Oct 2025
26 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 Oct 2025
26 Oct 2025