2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

பப்புவா நியூ கினியா நிலச்சரிவில் 300க்கும் மேற்பட்டோர் பலி

Freelancer   / 2024 மே 26 , பி.ப. 02:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

பப்புவா நியூ கினியாவில் கடந்த வெள்ளிகிழமை (24) பெய்த மழையில் 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கனமழையின் போது கிராமத்தில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டு பல வீடுகள் சேதமடைந்துள்ளதுடன் அதிகாலை 3 மணியளவில் ஏற்பட்ட நிலச்சரிவால் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த பலர் மண்ணில் புதையுண்டனர்.

இதையடுத்து, பேரிடர் மீட்புக் குழுவினர் அங்கு விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில், இந்த நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 300ஐ தாண்டியுள்ள நிலையில், 1,182 வீடுகள் புதையுண்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.S


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X