2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

பயங்கரவாத தாக்குதலில் 102 பாக். வீரர்கள் பலி

Freelancer   / 2024 ஓகஸ்ட் 28 , மு.ப. 10:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் நேற்று இராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 102 பாகிஸ்தான் இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் நேற்று முன்தினம், ‘முசகேல்’ மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலையில் பயணிகள் பஸ் மற்றும் டிரக் ஒன்றை பயங்கரவாதிகள் வழிமறித்து, அவர்களை வேறு இடத்திற்கு கொண்டு சென்று சுட்டு படுகொலை செய்தனர். இதில் 23 பேர் உயிரிழந்தனர்.

இந்த கொடூர சம்பவத்துக்கு பலூசிஸ்தான் முதல்வர் சர்பராஸ் புக்டி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் நேற்று ‘ராஸ்பெல்லா’ என்ற இடத்தில் இராணுவ முகாம் மீது ஆயுதம் தாங்கிய படையினர் நடத்திய தாக்குதலில் 102 பாகிஸ்தான் இராணுவத்தினர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இத்தாக்குதலுக்கு பி.எல்.ஏ. எனப்படும் பலூசிஸ்தான் விடுதலை இராணுவம் என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.S

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X