2026 மார்ச் 26, வியாழக்கிழமை

போரை முடிவுக்கு கொண்டுவர ட்ரம்ப் 15 அம்ச திட்டம்

Freelancer   / 2026 மார்ச் 26 , மு.ப. 08:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஈ​ரானுக்கு எதி​ரான போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் 15 அம்ச திட்​டத்தை வெளி​யிட்​டுள்​ளார். அவற்றை ஏற்க மறுத்த ஈரான், பதி​லுக்கு 5 கடுமை​யான நிபந்​தனை​களை வெளி​யிட்​டுள்​ளது.

அணு ஆயுத தடை ஒப்​பந்​தத்​துக்கு ஈரான் மறுத்​த​தால், அந்​நாட்​டின் மீது அமெரிக்கா மற்​றும் இஸ்​ரேல் போர் தொடுத்​தது. இந்த போர் ஆரம்​பித்து 25 நாட்​களுக்கு மேல் ஆகி​விட்ட நிலை​யில், மேற்கு ஆசி​யா​வுக்கு கூடு​தல் ராணுவத்தை அனுப்​பும் பணி​யில் அமெரிக்கா ஈடு​பட்​டுள்​ளது. அதே நேரத்​தில் ஈரான் போரை முடிவுக்​குக் கொண்டு வர 15 அம்ச திட்​டத்தை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வெளி​யிட்​டுள்​ள​தாக நேற்று தகவல்​கள் வெளி​யா​யின.

இதற்​கிடை​யில், அமெரிக்கா - ஈரான் இடையே பேச்​சு​வார்த்தை நடத்​தும் முயற்சி பாகிஸ்​தானில் நடை​பெறுகிறது. பாகிஸ்​தான் ராணுவ தளபதி அசிம் முனீர் இதில் மத்​தி​யஸ்​த​ராக ஈடு​பட்​டுள்​ளார் என்​றும் தகவல் வெளி​யானது. ஈரானின் ஏவு​கணை மற்​றும் அணு ஆயுதத் திட்​டத்தை முடக்​கும் முயற்​சி​யில் அமெரிக்கா மற்​றும் இஸ்​ரேல் ஈடு​பட்​டுள்​ளது. ஆனாலும், இஸ்​ரேல் மற்​றும் வளை​குடா நாடு​கள் மீது ஈரான் தொடர்ந்து ஏவு​கணை தாக்​குதல் நடத்​துகிறது. ஹார்​முஸ் ஜலசந்தி ஈரான் கட்​டுப்​பாட்​டில் உள்​ள​தால், அங்கு கச்சா எண்​ணெய் போக்​கு​வரத்து குறைந்து சர்​வ​தேச சந்​தை​யில் அதன் விலை உயர்ந்​துள்​ளது. இதனால் ஈரான் போரை முடிவுக்கு கொண்​டுவர 15 நிபந்​தனை​களை அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் வெளி​யிட்​டுள்​ளார். 

அதன் விவரம்​:

அமெரிக்கா - ஈரான் இடையே ஒப்பந்தம் பற்றி பேச ஒரு மாத காலத்துக்கு போர் நிறுத்தம்.

ஈரான் அணு ஆயுதத்துக்கு முடிவு கட்ட வேண்டும்.

யுரேனியம் செறிவூட்டுவதை நிறுத்த வேண்டும்.

ஹார்முஸ் ஜலசந்தி திறந்திருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

இருப்பில் உள்ள யுரேனியத்தை சர்வதேச அணுசக்தி முகமையிடம்(ஐ.ஏ.இ.ஏ) ஈரான் ஒப்படைக்க வேண்டும்.

ஈரானின் நடான்ஸ், இஸ்ஃபஹன் மற்றும் ஃபோர்டோ ஆகிய பகுதிகளில் உள்ள அணு ஆயுத உற்பத்தி மையங்களை மூடி, ஐஏஇஏ ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்.

அண்டை நாடுகளில் உள்ள தீவிரவாத குழுக்களுக்கு ஆதரவளிப்பதை நிறுத்த வேண்டும்.

ஏவுகணைகளின் எண்ணிக்கை மற்றும் இலக்கு தூரங்களுக்கு வரம்பு நிர்ணயிக்க வேண்டும்.

எதிர்காலத்தில் தற்காப்புக்கு மட்டுமே ஏவுகணைகளைப் பயன்படுத்த வேண்டும்.

இந்த நிபந்தனைகளுக்கு ஈரான் ஒப்புக் கொண்டால், ஈரான் மீதான தடை முழுவதுமாக நீக்கப்படும், அணு மின்சக்தி தயாரிப்புக்கு தேவையான உதவி செய்யப்படும். இவ்வாறு ஜனாதிபதி ட்ரம்ப் கூறியுள்ளார். (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .