2025 மே 29, வியாழக்கிழமை

பிரான்ஸ் ஜனாதிபதியை அறைந்தார் அவரது மனைவி

Freelancer   / 2025 மே 28 , மு.ப. 07:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான் விமானத்தில் வைத்து அறையப்படுவது போன்ற காணொலி ஒன்று வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றது.

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான், வியட்நாம், இந்தோனேசியா மற்றும் சிங்கப்பூர் உள்ளிட்ட தென் கிழக்கு ஆசிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றார்.

வியட்நாம் தலைநகர் ஹனோய் விமான நிலையத்திற்கு மனைவியுடன் வருகை தந்த போது, மேக்ரானின் மனைவி பிரிஜிட் மேக்ரான் அவரை கன்னத்தில் அறைவது போன்ற காணொளி வெளியாகியுள்ளது.

விமான கதவு திறந்தவுடன், மேக்ரானின் முகத்தில், சிவப்பு நிறை உடை அணிந்த ஒரு கை தள்ளுவது போன்று அந்த காணொலியில் பதிவாகியுள்ளது.

சிறிது நேரத்தில் சிவப்பு நிற உடையில் அவரது மனைவி பிரிஜிட் மேக்ரான், விமானத்தின் உள்ளே இருந்து வெளியே வருகின்றார்.

இதனால் அவரது மனைவி தான் அவரை அறைந்தார் என இணையத்தில் தகவல் பரவி வருகின்றது.

முதலில் இந்த காணொலியை நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாகிய பிரான்ஸ் ஜனாதிபதி அலுவலகம், பின்னர் காணொலி உண்மையானது என ஒப்புக்கொண்டுள்ளது.

அதேவேளையில், இது அவர்களுக்கு இடையேயான விளையாட்டான சண்டை என விளக்கமளித்துள்ளனர். (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X