2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

பரபரப்பை ஏற்படுத்தியுள்ள மலேசியத் தேர்தல்

Ilango Bharathy   / 2022 நவம்பர் 20 , மு.ப. 11:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

மலேசிய நாடாளுமன்ற பொதுத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நேற்றைய தினம்(19) விறுவிறுப்பாக நடைபெற்றது.

நாட்டை நீண்ட காலம் ஆண்டு வந்த ஐக்கிய மலேசிய தேசிய கட்சி (உம்னோ) கூட்டணி மீண்டும் ஆட்சியைப் பிடிக்குமா அல்லது எதிக்கட்சித் தலைவர் அன்வர் இப்ராகிம் தலைமையிலான அரசியல் சீர்திருத்த அணி ஆட்சியைக் கைப்பற்றுமா என்ற எதிர்ப்பாப்பு அந்நாட்டு மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

மலேசியாவில் ஐக்கிய மலேசிய தேசிய கட்சி கூட்டணி (உம்னோ) நீண்ட காலமாக ஆட்சியில் இருந்து வந்தது.

கடந்த 2018-ஆம் ஆண்டு தோ்தலில் அந்தக் கட்சி முதல்முறையாக தோல்வியடைந்தது. அப்போது பிரதமராக இருந்த நஜீப் ரஸாக் மீதான ஊழல் குற்றச்சாட்டு காரணமாக ஏற்பட்ட தோல்வியைத் தொடர்ந்து, முன்னாள் பிரதமர் மகாதிர்  முகமது தலைமையில் புதிய அரசு அமைந்தது.

ஆனால், கூட்டணியிலிருந்து சில கட்சிகள் வெளியேறியதால் மகாதிர்  அரசு 2020-ஆம் ஆண்டு கவிழ்ந்தது. அதற்குப் பதிலாக, மலேசிய ஐக்கிய மக்கள் கட்சியின் தலைவர்  முஹைதீன் யாசின் தலைமையில் புதிய அரசு அமைந்தது.

எனினும், அந்த அரசுக்கும் உம்னோ கட்சி தனது ஆதரவை விலக்கிக் கொண்டதால் முஹைதீன் ஆட்சி 17 மாதங்களில் கவிழ்ந்தது. அதன் பின்னர் , ஆளும் கூட்டணியில் அதிக இடங்களை வைத்திருக்கும் உம்னோ கட்சி சார்பில் சாப்ரி யாகூபை இடைக்காலப் பிரதமராகக் கொண்டு புதிய அரசு அமைக்கப்பட்டது.

எனினும், அவரது கட்சிக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் இல்லை. இச் சூழலில், புதிதாக தேர்தல் நடத்தி பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் நோக்கில் நாடாளுமன்றத்தின் ஆயுள் காலம் முடிவதற்கு 6 மாதங்களுக்கு முன்னரே அதனை பிரதமர் சாப்ரி யாகூப் கடந்த மாதம் கலைத்தார்.

அதன்படி, 222 உறுப்பினா்களைக் கொண்ட நாடாளுமன்றத்துக்கும், மூன்று மாகாண பேரவைகளுக்கும் வாக்குப் பதிவு நேற்றுக் காலை 7.30 மணிக்கு தொடங்கியது. 2.1 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். தலைநகர் கோலாலம்பூர் உள்ளிட்ட நகரங்களில் காலைமுதல் ஏராளமான வாக்காளர்கள் ஆா்வத்துடன் வாக்களித்தனர்.

உம்னோ கூட்டணிக்கும், எதிர்க் கட்சித்  தலைவர்  அன்வர்  இப்ராகிம் தலைமையிலான அரசியல் சீர்திருத்த அணிக்கும் இடையேதான் பிரதான போட்டி நிலவுகிறது.

முன்னாள் பிரதமர்  முஹைதீன் யாசின் தலைமையிலான தேசிய கூட்டணியும் களத்தில் இருக்கிறது. அன்வர் இப்ராகிம் தலைமையிலான அணிதான் முன்னிலை வகிக்கும், ஆனால், ஆட்சியைப் பிடிக்கும் அளவுக்கு பெரும்பான்மை கிடைக்காது என்பதால் வெற்றி யாருக்கு கிடைக்கும் என்று கணிக்க முடியாத நிலை உள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .