Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2025 செப்டெம்பர் 09 , பி.ப. 02:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
நேபாளத்தில் அரசுக்கு எதிரான போராட்டம் இரண்டாவது நாளாக நீடித்து வரும் நிலையில், அமைச்சர்களின் வீடுகள் தீ வைத்து எரிக்கப்பட்டதால் பதற்றம் நிலவுகிறது நேபாள பாராளுமன்றத்தை போராட்டக்காரர்கள் தீ வைத்து கொளுத்தினர், இந்நிலையில், காத்மாண்டு விமான நிலையம் அனைத்து விமானங்களையும் ரத்து செய்தது..
நேபாளத்தில் சமூக வலைதளங்களுக்கு தடை விதிக்கப்பட்டதை கண்டித்தும், ஊழல் நிர்வாகம், வேலையின்மை உள்ளிட்ட பிரச்னைகளை முன் வைத்து இளைஞர்கள் நேற்று போராட்டத்தில் குதித்தனர். அப்போது, காவல்துறையினர் துப்பாக்கிச்சூட்டில் 19 பேர் உயிரிழந்தனர். இளைஞர்கள் நடத்திய போராட்டத்தை அடுத்து நேற்று இரவு சமூக ஊடகங்கள் மீதான தடை நீக்குவதாக பிரதமர் அறிவித்தார். துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு பொறுப்பேற்று உள்துறை அமைச்சர், வேளாண் துறை அமைச்சர் ஆகியோர் பதவி விலகினர்.
இந்நிலையில், இன்றும் அரசுக்கு எதிரான போராட்டம் நீடித்து வருகிறது. துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு பொறுப்பேற்று பிரதமர் சர்மா ஒலியை பதவி விலகக் கோரி ஆயிரக்கணக்கான இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். காத்மாண்டுவில் நாடாளுமன்றத்துக்கு செல்லும் அனைத்து வழிகளையும் அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் மீது கற்களை வீசி விரட்டியடித்தனர்.
மேலும் காத்மாண்டுவில் உள்ள நேபாளி காங்கிரஸ் கட்சி அலுவலகத்தை தீ வைத்து எரித்தனர். இதேபோன்று லலித்பூரில் உள்ள அமைச்சர் பிரித்வி சுபா குருங்கின் வீட்டை தீ வைத்து கொளுத்தினர். இதனைத்தொடர்ந்து முன்னாள் பிரதமர் பிரசன்டா வீடு மீதும் போராட்டக்கார்கள் தாக்குதல் நடத்தினர்.
இந்நிலையில், இளைஞர்கள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் விதமாக அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு பிரதமர் சர்மா ஒலி அழைப்பு விடுத்துள்ளார். இன்று மாலை 6 மணி அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற உள்ளதாக அவர் அறிவித்துள்ளார். தற்போதைய சூழல் குறித்து அனைத்து தரப்பினருடம் பேசி வருவதாகவும், இந்த கடினமான சூழலில் மக்கள் அமைதி காக்க வேண்டும் என்றும் சர்மா ஒலி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், காத்மாண்டுவில் உள்ள நேபாள பிரதமர் சர்மா ஒலியின் வீட்டிற்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். இதனால் அவரது வீடு பற்றி எரிகிறது. நேபாளத்தில் சமூக வலைதளங்கள் மீதான தடை நீக்கப்பட்டபோது போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .