2025 நவம்பர் 07, வெள்ளிக்கிழமை

‘பரிஸில் இடம்பெற்றது பயங்கரவாதத் தாக்குதல்’

Editorial   / 2018 மே 14 , மு.ப. 04:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரான்ஸ் தலைநகர் பரிஸில், “அல்லாஹு அக்பர்” எனச் சத்தமிட்டவாறு, நேற்று முன்தினம் (12) இரவு, கத்திக் குத்தைக் கொண்டை மேற்கொண்ட நபர், பயங்கரவாத நோக்கங்களைக் கொண்டவர் எனக் கருதி, விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன என, பொலிஸார் தெரிவித்தனர்.

ஒருவரைக் குத்திக் கொன்ற இந்நபர், பொலிஸாரால் பின்னர் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தார். வாரயிறுதி நாட்களில், மக்கள் அதிகமாகக் காணப்படும், பரிஸின் ஒபெரா இல்லப் பகுதியிலேயே, இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஏற்கெனவே, 2015ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில் 130 பொதுமக்கள் கொல்லப்பட்டமை உட்பட, கடந்த 3 ஆண்டுகளில், பரிஸில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில், 245 பேர் கொல்லப்பட்டிருந்தனர்.

எனவே, இன்னொரு தாக்குதலா என அஞ்சி, பொதுமக்கள் அங்குமிங்கும் ஓடினர். எனினும், தாக்குதலாளி சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, பதற்றம் ஓரளவுக்குக் குறைந்தது. தாக்குதலாளியை, அதிர்ச்சிக்குள்ளாக்கிப் பிடிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன எனவும், அது தோல்வியடையவே, துப்பாக்கியால் சுடப்பட்டது எனவும், தகவல்கள் தெரிவிக்கின்றன.

இத்தாக்குதலை, தமது ஆயுதக்குழுவைச் சேர்ந்தவரே நடத்தினாரென, ஐ.எஸ்.ஐ.எஸ் குழு உரிமை கோரியது.

இது தொடர்பாக, பயங்கரவாதம் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன எனத் தெரிவித்த பொலிஸார், சம்பவ இடத்தில் இருந்தோரை மேற்கோள்காட்டி, “அல்லாஹு அக்பர்” என, அவ்வாயுததாரி சத்தமிட்டார் எனவும் குறிப்பிட்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X