2025 மே 14, புதன்கிழமை

பறவைகளாக மாறிய டிரோன்கள்

Freelancer   / 2023 ஒக்டோபர் 26 , மு.ப. 09:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்காவில் நியூயார்க் நகரில் மன்ஹாட்டன் பகுதியில் 843 ஏக்கர் நிலப்பரப்பில் சென்ட்ரல் பார்க் (Central Park) உள்ளது. இது நியூயார்க் நகரின் ஐந்தாவது மிக பெரிய பூங்கா என்பது குறிப்பிடத்தக்கது.


இங்குள்ள ஏரிக்கு அருகே ட்ரிஃப்ட் (DRIFT) எனும் டச்சு ஸ்டூடியோ ஒன்றினால் "பிரான்சைஸ் ஃப்ரீடம்" (Franchise Freedom) எனும் பெயரில் ஒரு நிகழ்வு நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், இரவு வானில் 1000 டிரோன்கள் ஒரே நேரத்தில், பல கலை வடிவங்களை காண்பிக்கும்படி பறக்க விடப்பட்டன.

இது குறித்து ட்ரிஃப்ட் அமைப்பு தங்கள் அதிகாரபூர்வ வலைதளத்தில், "மனிதன், இயற்கை மற்றும் தொழில்நுட்பம் ஆகிய மூன்றிற்கும் இடையே உள்ள தொடர்பை ஆய்வு செய்யும் ஒரு முயற்சி இது. கவித்துவமான இந்த நிகழ்வு, மனிதர்களாக நாம் ஒரே சமூகமாக சட்டதிட்டங்களுக்கு கட்டுப்பட்டு வாழ்வதை உணர்த்துகிறது" என தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X