Freelancer / 2024 மே 22 , பி.ப. 05:06 - 0 - {{hitsCtrl.values.hits}}

பலஸ்தீனத்தை தனி நாடாக ஸ்பெயின், அயர்லாந்து மற்றும் நோர்வே ஆகிய 3 ஐரோப்பிய நாடுகளும் அங்கீகரித்துள்ளன. அதே சமயம் இந்த 3 நாடுகளில் இருந்தும் தூதரக அதிகாரிகளை இஸ்ரேல் திரும்பப் பெற்றுள்ளது.
மேலும், இந்த விவகாரம் தொடர்பாக ஆலோசனை செய்வதற்காக தமது நாட்டுத் தூதுவர்களைத் திரும்ப அழைத்துள்ளதாக இஸ்ரேல் விளக்கம் அளித்துள்ளது.
இந்நிலையில், பலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்காமல் மத்திய கிழக்கு நாடுகளில் அமைதியை ஏற்படுத்த முடியாது என நோர்வே பிரதமர் ஜோனாஸ் கருத்து தெரிவித்துள்ளார்.
மேலும், இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மே 28 ஆம் திகதி வெளியாகும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இதே போன்று பலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்க பல்வேறு ஐரோப்பிய நாடுகள் ஆலோசித்து வருவதாகவும் கூறப்படுகிறது.S
17 minute ago
56 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
56 minute ago
1 hours ago
1 hours ago