Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
Freelancer / 2024 மே 13 , பி.ப. 04:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாகிஸ்தானில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கண்டித்து அரசுக்கு எதிராக நடந்த போராட்டத்தின் போது வன்முறை வெடித்ததில், பொலிஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பாகிஸ்தானில் கடந்த சில மாதங்களாக நிலவி வரும் கடும் பொருளாதார நெருக்கடியால் பணவீக்கம் காரணமாக அந்நாட்டு அரசு பொதுமக்கள் மீது அதிக வரி சுமத்தியுள்ளது.
மேலும் கோதுமை, எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையும் தாறுமாறாக உயர்ந்ததால் இயல்பு வாழ்கை முற்றிலும் பாதிப்படைந்துள்ளது.
இந்நிலையில் கடும் விலைவாசி உயர்வை கண்டித்து, காஷ்மீரில் அரசுக்கு எதிராக பொதுமக்கள் போராட்டத்தில் குதித்தனர். தகவலறிந்து வந்த பொலிஸார் போராட்டத்தை கைவிடும்படி வலியுறுத்திய நிலையில், அவர்களிடம் ஆர்ப்பாட்டக்காரர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
ஒரு கட்டத்தில் இரு தரப்பினருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டதில் போராட்டம் வன்முறையாக வெடித்தது. இதில் பொலிஸ் அதிகாரி ஒருவர் பலியானார்.
இந்த வன்முறையின் போது பொதுமக்கள் தாக்குதலை அடுத்து பொலிஸார் போராட்டக்காரர்களை கலைத்தனர். மேலும் போராட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக அந்த பகுதியில் தொலைபேசி மற்றும் இணைய சேவைகள் துண்டிக்கப்பட்டதுடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏராளமான பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.S
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
49 minute ago
57 minute ago
2 hours ago
3 hours ago