Shanmugan Murugavel / 2022 ஜனவரி 19 , பி.ப. 06:12 - 0 - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமபாத்தில் பொலிஸார் ஒருவர் கொல்லப்பட்ட தாக்குதல் ஒன்றை பாகிஸ்தானின் உள்நாட்டமைச்சர் ஷெய்க் ரஷீட் அஹ்மட், பயங்கரவாதச் சம்பவமொன்றாக அடையாளங்கண்டுள்ளார்.
முன்னதாக, உள்ளூர் குற்றவாளிகளுக்கிடையிலான துப்பாக்கி மோதலாக இருக்கும் எனக் கூறப்பட்டிருந்தது.
இலக்கு வைக்கப்பட்ட தாக்குதல் ஒன்றில் பொலிஸ் அதிகாரிகள் மீது தாக்குதலாளிகள் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாக அஹ்மட் தெரிவித்த நிலையில், இத்தாக்குதலில் இரண்டு பொலிஸ் அதிகாரிகள் காயமடைந்தும் இருந்ததாக இஸ்லாமபாத்திலுள்ள பொலிஸ் அதிகாரிகள் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, பதில் தாக்குதலாக தாக்குதலாளிகள் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தாக்குதலுக்கு தெஹ்ரீக்-ஈ-தலிபான் பாகிஸ்தான் உரிமை கோரியுள்ளது.
5 hours ago
5 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
6 hours ago
6 hours ago