Freelancer / 2025 மார்ச் 01 , மு.ப. 08:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாகிஸ்தானிலுள்ள மதரஸாவில் நடந்த குண்டுவெடிப்பில் 5 பேர் உயிரிழந்தனர். 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணம் அக்கோரா கட்டக் மாவட்டத்தில் தலிபான் நடத்தும் மதரஸா பள்ளி ஒன்று உள்ளது. இந்த மதரஸா வளாகத்தில் மசூதி அமைந்துள்ளது. இந்த மதரஸாவில் நேற்று வெள்ளிக்கிழமை என்பதால் ஏராளமானோர் வளாகத்தில் கூடியிருந்தனர். இந்நிலையில் பிற்பகல் நேரத்தில் குண்டுவெடிப்பு நடந்தது.
இந்த குண்டுவெடிப்பு தாக்குதலில் மசூதியில் வழிபாடு நடத்திய 5 பேர் உயிரிழந்தனர். மேலும், 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். (a)
1 hours ago
1 hours ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
1 hours ago
2 hours ago