Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Freelancer / 2022 ஜூலை 19 , பி.ப. 06:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
கரீனா என்ற 16 வயது இந்து சிறுமி கடத்தப்பட்டு, கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டு திருமணம் செய்து வைக்கப்பட்டமையைக் கண்டித்து, பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள நவாப்ஷாவில் உள்ள முன்னாள் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரியின் இல்லத்துக்கு முன்னால், பாகிஸ்தான் இந்து சமூகத்தினர் போராட்டம் நடத்தியதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கலீல் ரஹ்மான் ஜோனோவின் குடும்ப உறுப்பினர்களால் காசி அகமது டவுன் உன்னார் முஹல்லாவில் ஜூலை 6 ஆம் திகதியன்று சிறுமி கடத்தப்பட்டார் என்று போராட்டக்காரர்கள் தெரிவிக்கின்றனர்.
போராட்டக்காரர்கள் பொலிஸாருக்கு எதிராக கோஷங்களை எழுப்பியதுடன், சிறுமியை கண்டுபிடிக்க உதவுவதற்கு முன்னாள் ஜனாதிபதி தலையீட வேண்டும் கேட்டுக் கொண்டனர்.
இருப்பினும், கரீனா கடத்தப்படவில்லை என்று தெரிவிக்கும் உள்ளூர் பொலிஸார், அவர் மீர் முகமது ஜோனோ கிராமத்தைச் சேர்ந்த கலீல் ரஹ்மான் ஜோனோவுடன் ஓடிவிட்டார் என்றும் கராச்சியில் உள்ள நீதிமன்றத்தில் அவரை திருமணம் செய்து கொண்டார் என்றும் தெரிவிக்கின்றனர்.
சுந்தர்மால் அளித்த முறைப்பாட்டுக்கு அமைய கலீலின் தந்தை அஸ்கர் ஜோனோ கைது செய்யப்பட்டார். என்று பொலிஸார் தெரிவித்தனர்.
கரீனா மற்றும் கலீல் ரஹ்மான் ஜோனோவின் திருமண பதிவு சான்றிதழை காட்டிய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், சிந்து மேல்நீதிமன்றத்தில் சிறுமி ஆஜர்படுத்தப்படுவார் என்றும் எங்கு செல்லவேண்டும் என்பதை குறித்த சிறுமி தீர்மனிப்பார் என்றும் கூறினார்.
சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கூற்றை நிராகரித்த இந்து பஞ்சாயத்து துணைத் தலைவர் லஜ்பத் ராய், இந்து சமூகத்தின் பிரதிநிதிகள் அத்தியட்சகரை சந்தித்ததாகவும் ஆனால் அவர் தங்களுக்கு உதவவில்லை என்றும் டான் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில், பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் இந்து சிறுமி பூஜா குமாரி ஒரு நபரால் அவரது வீட்டில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் நாட்டில் உள்ள பல்வேறு மனித உரிமை அமைப்புகள் கடும் கண்டனத்தை ஏற்படுத்தியது.
பாகிஸ்தானில் உள்ள பெண்கள், சிறுபான்மையினர், குழந்தைகள் மற்றும் ஊடகவியலாளர்களின் மோசமான நிலைமையை பிரதிபலிக்கும் பல ஊடக அறிக்கைகள் மற்றும் உலகளாவிய அமைப்புகளால் பாகிஸ்தானின் மனித உரிமைகள் புதிய இறக்கத்தை தொட்டுள்ளன என்று ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 May 2025
18 May 2025
18 May 2025