Freelancer / 2024 மே 10 , பி.ப. 07:58 - 0 - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தானின் கவதார் நகரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 7 பேர் உயிரிழந்த நிலையில், ஒருவர் காயமடைந்துள்ளார்.
பாகிஸ்தானின் குவாதர் துறைமுக நகரில் உள்ள குடியிருப்பு பகுதிக்குள் நேற்று நுழைந்த மர்மநபர் ஒருவர் அங்கிருந்தவர்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு நடத்திவிட்டு தப்பி சென்றான். இந்த துப்பாக்கி சூட்டில் 7 பேர் உயிரிழந்தனர். மேலும் ஒருவர் காயமடைந்தார்.
தகவல் அறிந்து விரைந்த பொலிஸார் காயமடைந்த நபர் மற்றும் சடலங்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்டவர்கள் மற்றும் காயமடைந்த நபர் அங்கிருந்த சலூன் கடையில் வேலை செய்பவர் என தெரியவந்துள்ளது.
மேலும், இந்த தீவிரவாத தாக்குதல் சம்பவத்துக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.S
27 minute ago
36 minute ago
46 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
36 minute ago
46 minute ago
2 hours ago