Editorial / 2018 ஏப்ரல் 26 , மு.ப. 11:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியாவின் - உத்தரப் பிரதேச மாநிலம் குஷிநகர் மாவட்டத்தில் இன்று காலை பாடசாலை வான் மீது ரயில் மோதியதில், 13 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.
பாதுகாப்பற்ற ரயில் கடவையை வான் கடக்க முயன்றதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
விபத்தில் உயிரிழந்த அனைவரும் 10 வயதுக்கு குறைந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குஷிநகர் அருகே பேவ்பூர்வா பகுதியில் உள்ள ரயில் கடவையை வான் வடக்க முயன்ற சந்தர்ப்பத்தில் ரயிலில் மோதியுள்ளது.
விபத்து நடந்தபோது வானில் பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட 25 பேர் இருந்துள்ளனர்.
கோரக்பூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையில் விபத்து தொடர்பிலான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
36 minute ago
57 minute ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
57 minute ago
9 hours ago