2026 மார்ச் 18, புதன்கிழமை

பாதுகாப்புக்காக கப்பல்களைக் கோரும் ஈரான்

Shanmugan Murugavel   / 2026 மார்ச் 17 , பி.ப. 05:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

வளைகுடாவிலிருந்து ஹொர்முஸ் நீரிணையூடாக இந்தியக் கொடியுடைய அல்லது இந்தியா நோக்கி பயணிக்கும் கப்பல்களின் பாதுகாப்பான பயணத்துக்கான பேச்சுக்களின் அங்கமாக பெப்ரவரியில் கைப்பற்றப்பட்ட மூன்று எண்ணெய்க் கப்பல்களை விடுவிக்குமாறு இந்தியாவை ஈரான் வினவியுள்ளதாக தகவலறிந்த மூன்று தகவல் மூலங்கள் தம்மிடம் தெரிவித்ததாக றொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்திய கடற்பரப்புக்கு அண்மையில் அடையாளங்களை மறைத்த அல்லது மாற்றிய மற்றும் கடலில் சட்டரீதியற்ற முறையில் கப்பலுக்கு கப்பல் பரிமாறியதில் பங்கெடுத்த ஈரானுடன் தொடர்புடைய மூன்று எண்ணெய்க் கப்பல்களை இந்திய அதிகாரிகள் கைப்பற்றியிருந்தனர்.

இதேவேளை குறிப்பிட்ட மருந்துகள், மருத்துவ உபகரணங்களின் விநியோகங்களையும் ஈரான் எதிர்பார்ப்பதாக ஈரானிய அதிகாரியொருவரான தகவல் மூலம் தெரியவந்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X