Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Ilango Bharathy / 2022 டிசெம்பர் 07 , மு.ப. 09:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுவிட்சர்லாந்தின் தற்போதைய சட்டத்தின்படி, ஒரு பெண்ணைக் கட்டாயப்படுத்தி பாலியல் வன்புணர்வு செய்வது, அதற்கு அந்த பெண்ணிடமிருந்து எதிர்வினை கிளம்புவது ஆகிய செயல்கள் நடந்தால் மாத்திரமே, அது கற்பழிப்பு குற்றமாக கருதப்படுகிறது.
இந்நிலையில், குறித்த சட்டத்தில் திருத்தங்கள் தேவை எனவும், ஒரு பெண் எதிர்ப்பு தெரிவிக்காவிட்டாலும், அவளுடைய சம்மதமின்றி பாலியல் வன்புணர்வு செய்வதும் கற்பழிப்பு முயற்சிக் குற்றமாக கருதப்பட வேண்டும் எனவும், ஆண்-பெண் பாலின பாகுபாடின்றி யார் பாதிக்கப்பட்டாலும், பாலியல் பலாத்காரச் சட்டத்தில் கற்பழிப்பு குற்றமாக கருதப்பட வேண்டும்” எனவும் தெரிவித்து அந்நாட்டுப் பாராளுமன்றத்தில் நேற்றுமுன்தினம் விவாதமொன்று மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது ஒருவருடைய அனுமதியின்றி அவரிடம் பாலியல் செயல்களில் ஈடுபடுவது கற்பழிப்பு குற்றம் என்று சேர்க்க வேண்டும் என்று முன்மொழியப்பட்டுள்ளது.
ஆனால், அது குழப்பத்தை உருவாக்கும் மற்றும் நடைமுறையில் வைப்பது கடினம் என்று கூறி பல வலதுசாரி பாராளுமன்ற உறுப்பினர்கள் அந்த விருப்பத்தை எதிர்த்தனர்.
எனினும், பாலியல் துஷ்பிரயோகத்தால் பாதிக்கப்பட்ட பெண்களின் உரிமைகளுக்காக நடந்துவரும் பல ஆண்டு செயல்பாட்டிற்குப் கிடைத்த ஒரு பெரிய வெற்றியாக இது பார்க்கப்படுகிறது.
பாராளுமன்ற இரு சபைகளிலும் இவ்விவகாரம் குறித்த ஒருமித்த முடிவு ஏற்பட்ட பின், இந்த விஷயம் சுவிட்ஸர்லாந்தின் நேரடி ஜனநாயக அமைப்பின் கீழ், பொதுமக்கள் வாக்கெடுப்புக்குச் செல்லும். அதன்பின்னரே சட்டம் அமுலாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
30 minute ago
38 minute ago
47 minute ago
52 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
38 minute ago
47 minute ago
52 minute ago