2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

பாலியல் வலையில் வீழ்த்திய இளம்பெண்

Janu   / 2024 ஏப்ரல் 08 , பி.ப. 04:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்காவில் 23 வயது இளம்பெண் தன்னை 14 வயது சிறுமி என கூறி பாடசாலை மாணவர்கள் பல பேரை பாலியல் விருப்பத்திற்கு பயன்படுத்தி கொண்ட சம்பவம் நடந்துள்ளது. இதுபற்றி நியூயோர்க் போஸ்ட் வெளியிட்ட செய்தியின்படி, அலைசா ஆன் ஜிங்கர் என்ற இளம்பெண் பாலியல் விருப்பத்துடன் டீன் ஏஜ் சிறுவன் ஒருவனை அணுகியுள்ளார்.

 ஜிங்கர் கைதுக்கு பின், 4 சிறுவர்கள் இதேபோன்று நாங்களும் பாதிக்கப்பட்டு உள்ளோம் என கூறி வந்தது பொலிஸாரை அதிர்ச்சி அடைய வைத்தது.

மாணவர் ஒருவனிடம் 30 தடவைகள் பாலியல் உறவில் ஈடுபட்ட குற்றச்சாட்டிற்காக ஜிங்கர்  கடந்த ஆண்டு நவம்பரில், கைது செய்யப்பட்டார். பல மாணவர்களுக்கு ஆபாச வீடியோக்களையும் அப்போது அனுப்பியிருக்கிறார். அவர், தன்னை 14 வயது சிறுமி என கூறி கொண்டு பள்ளி மாணவர்களை தன்னுடைய வலையில் வீழ்த்தி  பாலியல் உறவை கொண்டிருக்கிறார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X