2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

பி.பி.சி ஆவணப்படத்தால் சர்ச்சையில் சிக்கிய மோடி

Ilango Bharathy   / 2023 ஜனவரி 26 , மு.ப. 09:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பிரபல செய்தி ஊடகமான  பி.பி.சி கடந்த 2002 ஆம் ஆண்டு முழு இந்தியாவையும்  உலுக்கிய ‘குஜராத் கலவரம்‘ தொடர்பாக ``India: The Modi Question" என்ற இரண்டு பாகங்களைக் கொண்ட ஆவணப்படமொன்றை கடந்த செவ்வாயன்று வெளியிட்டது.

குறித்த ஆவணப்படத்தில், முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையைத் தடுக்க மோடி முயற்சி மேற்கொள்ளாமல் இருந்துள்ளார் எனவும்  குற்றம் சாட்டப்பட்டிருந்தது.இது உலகளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

 இந்நிலையில் குறித்த  ஆவணப்படத்தில் பிரதமர் மோடி குறித்த சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம் பெற்றமை தொடர்பாக கண்டனம் தெரிவித்துள்ள அமெரிக்கா, இந்தியாவுடன் மதிப்பு மிக்க உறவை  தாம் நாடுவதாகவும், இந்திய அமெரிக்க உறவுகள் வலுவானநிலையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

அதேசமயம் பிரித்தானியாவின் பிரதமர் ரிஷி சுனக்கும் பி.பி.சியின் ஆவணப்படத்துக்கு ஆதரவு அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .