Freelancer / 2021 டிசெம்பர் 27 , மு.ப. 09:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜேம்ஸ் வெப் என்று பெயரிடப்பட்டுள்ள உலகின் மிகப்பெரிய விண்வெளித் தொலைநோக்கி வெற்றிகரமாக விண்ணுக்கு ஏவப்பட்டுள்ளது.
பிரெஞ்ச் கயானாவிலுள்ள ஏவுதளத்திலிருந்து, ஏரியன் ரொக்கெட் மூலம் சனிக்கிழமை அது பூமியிலிருந்து ஏவப்பட்டது.
அரை மணிநேரத்தில் அது தனது முதற்கட்டச் சுற்றுப்பாதைக்குச் சென்றுசேர்ந்தது.
ஏற்கனவே அனுப்பப்பட்ட ஹப்பிள் தொலைநோக்கியின் பணிகளை இந்தத் தொலைநோக்கி தொடரவுள்ளது. அதைக் காட்டிலும் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி 100 மடங்கு அதிக ஆற்றல்மிக்கது.
அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் கனடா விண்வெளி அமைப்புகள் இணைந்து இதை உருவாக்கியுள்ளன.
அந்த அமைப்புகளுக்காக உலகெங்கும் உள்ள ஆயிரக்கணக்கான பொறியாளர்கள் 30 ஆண்டுகள் இந்தத் தொலைநோக்கித் திட்டத்தில் பணியாற்றியுள்ளனர்.
பிரபஞ்சத்தின் பல்வேறு புதிர்களுக்கு விடைகாண இந்த விண்வெளித் தொலைநோக்கி உதவியாக இருக்கும்.
பூமியிலிருந்து ஒன்றரை மில்லியன் கிலோமீற்றர் தொலைவிலுள்ள கண்காணிப்புச் சுற்றுப்பாதைக்கு அது இறுதியில் சென்றுசேரும். அதற்குச் சுமார் ஒரு மாதம் பிடிக்கும்.
இந்தப் புதிய தொலைநோக்கி, நமது பிரபஞ்சத்தை அதன் முன்னோடிகளை விட இன்னும் ஆழ்ந்து பார்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. .
13.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் பிரபஞ்சத்தில் நடந்த நிகழ்வுகளைக் கண்டறியும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
விஞ்ஞானிகள் அதன் மேம்பட்ட திறன்களைப் பயன்படுத்தி தொலைதூரத்தில் சூரிய குடும்பத்துக்கு வெளியே உள்ள கோள்களின் வளிமண்டலங்களை ஆய்வு செய்ய முடியும் என நம்புகிறார்கள்.
அங்கு உயிர்கள் வாழ்ந்த, வாழ்வதற்கான அறிகுறிகள் ஏதேனும் கண்டறியப்படலாம் என்ற எண்ணமும் அவர்களுக்கு உள்ளது.
20 minute ago
50 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
50 minute ago
1 hours ago
2 hours ago