2025 நவம்பர் 05, புதன்கிழமை

பிரபல நடிகை காலமானார்

Freelancer   / 2022 ஓகஸ்ட் 09 , மு.ப. 08:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரபல பாடகியும் நடிகையுமான ஒலிவியா நியூட்டன் ஜோன் நேற்று (08)  காலமானார்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

1948 ஆம் ஆண்டு கேம்பிரிட்ஜில் ஒலிவியா நியூட்டன் பிறந்தார். இறக்கும் போது அவருக்கு வயது 73 ஆகும்.

கிரேஸ் என்ற பிரபல திரைப்படத்தில் இவர் நடித்துள்ளார், அதில் அவர் செண்டி என்ற பாடசாலை மாணவியாக நடித்து பிரபலமாகியிருந்தார்.  ஒலிவியா நியூட்டனுக்கு அவரது ரசிகர்கள் தமது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X