Ilango Bharathy / 2022 மார்ச் 22 , மு.ப. 09:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமெரிக்காவில் அண்மைக்காலமாக ஆசிய அமெரிக்கர்கள் மீதான இனவெறி தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன.
குறிப்பாக, கடந்த 2020ஆம் ஆண்டுக்கு பின்னரே இவ்வாறான தாக்குதல்கள் இடம்பெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பிரபல ஹொலிவூட் நடிகையொருவர் தன்மீது இனவெறித்தாக்குதல் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ள சம்பவம் உலகளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
‘தி பாய்ஸ்’ மற்றும் ‘சூசைடு ஸ்க்வாட்’ ஆகிய படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை கரென் புகுஹரா(KarenFukuhara).

ஜப்பான் வம்சாவளியை சேர்ந்த இவர் அண்மையில் ”தன்மீது இனவெறி தாக்குதல் நடத்தப்பட்டதாக” தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.
“ஆசிய இனவெறியை நிறுத்துங்கள்” என்ற ஹேஷ்டேக்குடன் வெளியிட்ட குறித்த பதிவில் ” நான் ஒரு ஹோட்டலில் இருந்து வெளியே வந்தபோது, எதிரே வந்த நபர் எனது தலையில் தாக்கினார். அத்துடன் எனது இனத்தை இழிவுப்படுத்தும் வார்த்தைகளால் திட்டினார். கடந்த காலங்களில் இனரீதியான அவதூறுகள் மற்றும் புண்படுத்தும் செயல்களால் நான் பாதிக்கப்பட்டிருந்தாலும், உடல் ரீதியாக நான் பாதிக்கப்படுவது இதுவே முதல் முறை” இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் அவரது பதிவானது இணையத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
48 minute ago
7 hours ago
17 Jan 2026
17 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
48 minute ago
7 hours ago
17 Jan 2026
17 Jan 2026